லம்போர்கினி நிறுவனத்தின் வரலாற்றில் மிக அதிகமாக விற்பனையான சூப்பர் கார்களில் கல்லார்டோ முதன்மை வகிக்கின்றது. தற்பொழுது கல்லார்டோ காருக்கு மாற்றாக ஹூராகேன் விற்பனையில் உள்ளது.
கல்லார்டோ சூப்பர் காரின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 4.7கிமீ தருகின்றதாம். முதல் 5000 மைல்கள் அதாவது 8000 கிமீ வரை சர்வீஸ் செய்ய எவ்வளவு பராமரிப்பு செலவாகின்றது எனபதனை விளக்கியுள்ளனர்.
முதல் தலைமுறை கல்லார்டோ காரில் பொருத்தப்பட்டுள்ள கிளட்ச் 12,000 கிமீ க்குள் மாற்ற வேண்டியது அவசியமாகின்றதாம். அவ்வாறு மாற்றினால் கிளட்ச் மாற்ற $ 7000 – $ 9000 (ரூ.4.64 லட்சம் முதல் ரூ.5.97 லட்சம் ) வரை ஆகின்றதாம். முதல் தடவை மாற்றிய பின்னர் ஓட்டுதலை பொறுத்து 32,000 கிமீ வரை கிளட்ச் நீடிக்குமாம்.
என்ஜின் ஆயில் , ஆயில் ஃபில்டர் , காற்று ஃபில்டர் மற்றும் பிரேக் ஃபுளூயீட் டிஃப்ரன்ஷியல் போன்றவற்றில் முதல் ஆயில் சர்வீஸ் செய்யப்படுகின்றதாம். இதற்க்கு அமெரிக்கா டாலர் $1000 (ரூ.66,000) வரை செலவாகின்றதாம்.
கல்லார்டோ இரண்டாவது ஆயில் சர்வீசில் கூடுதலாக ஸ்பார்க் பிளக் மாற்றப்படுதனால் $1000 (ரூ.1,32லட்சம்) வரை செலவாகின்றதாம்.
12,000 கிமீ முதல் 16,000 கிமீ வரை தாங்ககூடிய 1 செட் டயருக்கு (மிச்செலின் சூப்பர் ஸ்போர்ட் அல்லது பைரேலி பிஜீரோ ) $ 1500-$2000 ( ரூ.1 லட்சம் முதல் 1.32 லட்சம் )வரை செலாகின்றதாம்.
[youtube https://www.youtube.com/watch?v=fhxNGUte5Qk]
பாரமரிப்பு செலவுகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட உரிமையாளர்க்கு டிரான்ஸ்மிஷன் ஹைட்ராலிக் லைனில் ஏற்பட்ட பிரச்சனைக்காக $ 7200 (ரூ.4.78 லட்சம்) செலவாகியதாம்.
Lamborghini Gallardo Maintenance Cost