ரெனோ க்விட் கார் சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் தன போட்டியாளர்களுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ட்டோ 800 , இயான் போன்ற கார்கள் மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
1. மைலேஜ்
தனது போட்டியாளர்களை விட அதிக மைலேஜ் தரவல்லதாக ரெனோ க்விட் விளங்குகின்றது. க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும். இயான் மற்றும் ஆல்ட்டோ 800 கார்களின் மைலேஜ் சற்று குறைவு.
2. ஆற்றல்
தனது போட்டியாளர்கள் போலவே 800சிசி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ள க்விட் காரின் ஆற்றல் 53.2பிஎச்பி ஆகும். இயான் காருடைய ஆற்றல் 54பிஎச்பி ஆகும். ஆல்ட்டோ 800 வெறும் 47பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
3. இடவசதி
தனது போட்டியார்களுடன் ஒப்பீடுகையில் கூடுதல் வீல்பேசினை பெற்று விளங்கும் ரெனோ க்விட் காரின் லெக்ரூம் ஹேட்ரூம் வசதிகள் சிறப்பாக உள்ளது.
4. பூட்ஸ்பேஸ்
தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் அதிக லக்கேஜ் ஸ்பேஸ் அதாவது 300லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.
5. தொடுதிரை அமைப்பு
க்விட் காரை விடகூடுதல் விலையுள்ள மற்ற பிரிவு கார்களில் கூட தொடுதிரை அமைப்பு இல்லை. ஆனால் க்விட் காரில் உள்ள தொடுதிரை வசதியுடன் நேவிகேஷன் அமைப்பினை பெற இயலும்.
6. தனி கவனம்
ரெனோ நிறுவனம் க்விட் காரின் மீது மட்டும் தனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதாவது க்விட் காருக்கான தனியான மொபைல் ஆப்ளிகேஷன் 24X7 மணி நேர சேவை வழங்க உள்ளது.
7. துனைகருவிகள்
ரெனோ க்விட் காரை பிரிமியம் காராக மாற்றும் வகையில் 60க்கு மேற்பட்ட துனைகருவிகளை வழங்கியுள்ளது.
ரெனோ க்விட் கார் விலை
- க்விட் ஸ்டான்டர்டு – ரூ.3,10 லட்சம்
- க்விட் RXE – ரூ.3.47 லட்சம்
- க்விட் RXE(O) – ரூ.3.54 லட்சம்
- க்விட் RXL – ரூ.3.73 லட்சம்
- க்விட் RXT – ரூ.4.08 லட்சம்
- க்விட் RXT (O)- ரூ.4.19 லட்சம்