தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களின் புதிய மாடலாக டட்சன் ரெடி-கோ கார் ரூ.2.39 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களின் விலையை விட குறைவாக ரெடி-கோ காரின் விலை அமைந்துள்ளது.
க்விட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் க்விட் காரின் தோற்றத்தினை தழுவமால் ரெடி-கோ வித்தியாசமான தோற்றத்தினை பெற்று சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.
54 hp ஆற்றலை மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.
D , A , T , T (O) மற்றும் S என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் அமைந்துள்ள ரெடிகோ காரில் டாப் வேரியண்டாக S வேரியண்ட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ரெடி-கோ D வேரியண்ட் (ரூ.2.39 லட்சம்)
- டிரைவர் பக்க ஓஆர்விஎம்
- கருப்பு ஸ்டீல் வீல்
- முன்பக்க கண்ணாடிக்கு ஒற்றை வைப்பர்
- பின்புற கதவுகளுக்கு சைல்ட் லாக்
- மூன்று நட்சத்திர இருக்கை பட்டை அனைத்துக்கும்
- ட்ரிப் மீட்டர்
- எரிபொருள் அளவினை காட்டும் டிஸ்பிளே
ரெடி-கோ A வேரியண்ட (ரூ.2.83 லட்சம்)
ரெடி-கோ D வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- பாடி வண்ணத்தில் பம்பர்கள்
- பயணிகள் பக்க ஓஆர்விஎம்
- ஏசி
- க்ரோம் கிரில்
- என்ஜின் இம்மொபைல்ஸர்
- ஃபோல்டிங் வசதி கொண்ட பின் இருக்கைகள்
- ஸ்டீல் வீல்
- பவர் சாக்கெட்
ரெடி-கோ T வேரியண்ட (ரூ.2.83 லட்சம்)
ரெடி-கோ A வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- பாடி வண்ணத்தில் கதவு கைப்பிடிகள்
- பவர் ஸ்டீயரிங்
- ஃபுல் வீல் கவர்
- முன்பக்கத்தில் இரு ஸ்பீக்கர்கள்
- மொபைல் டாக்கிங் ஸ்டேஷன்
ரெடி-கோ T (O) வேரியண்ட (ரூ.3.09 லட்சம்)
ரெடி-கோ T வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- முன்பக்க பவர் வின்டோஸ்
- ஆடியோ சிஸ்டம் வசதியுடன் ரேடியோ , சிடி , எம்பி3 , யூஎஸ்பி தொடர்பு
source: www.automobiletamilan.com
ரெடி-கோ S வேரியண்ட (ரூ.3.43 லட்சம்)
ரெடி-கோ T (O) வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக
- எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள்
- ஓட்டுநருக்கான காற்றுப்பை
விற்பனையில் முன்னனி வகிக்கும் மாருதி ஆல்ட்டோ 800 காரை விட 32 சதவீதம் குறைவான பராமரிப்பு செலவினை கொண்ட மாடலாக ரெடி-கோ கார் விளங்கும். 2 வருட வாரண்டியுடன் வரையற்ற கிலோமீட்டருடன் கிடைக்கின்றது. ஈசி கிட் – ஸ்போர்ட் , ஈசி கிட் -பிரிமியம் , கூல் கிட் , அர்பன் கிட் மற்றும் ஸ்டைல் கிட் என மொத்தம் 5 வகையில் ரெடி கோ காருக்கு 50க்கு மேற்பட்ட துனை கருவிகள் வழங்குகின்றது. இதன் மூலம் ரியர் ஸ்பாய்லர் , ரூஃப் ரெயில்கள் , ஸ்கிட் பிளேட் மேலும் பலவற்றை பெறலாம்.
மேலும் படிங்க ; க்விட் vs ரெடி-கோ கார் ஒப்பீடு
[envira-gallery id=”7303″]