இந்தியாவில் சொகுசு மோட்டார் இல்லங்கள் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னால் பிசிபி டெர்ரா மோட்டார் வாகனங்கள் விற்பனைக்கு வந்த்து.
ஜெசிபிஎல் இந்தியாவின் முன்னணி பேருந்து கட்டுமான நிறுவனமாகும். JCBL நிறுவனம் இத்தாலியின் PLA-SLA நிறுவனதுடன் இனைந்து இந்தியாவில் இரண்டு மோட்டார் வீடுகளை அறிமுகம் செய்யதுள்ளது.
இந்த இரண்டு மாடல்களிலும் ABS,ESP,க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஏணி வசதிகள் உள்ளன.
என்ஜின் ஃபியட் டக்கேட் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 180PS மற்றும் டார்க் 400NM ஆகும்.
JCBL PLA HS 75
JCBL PLA HS 75 என்பதே இந்த வாகனத்தின் பெயராகும். இந்த மாடலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை 4 மற்றும் 5 இருக்கைகள் கொண்ட வாகனங்களாகும்.
இவற்றில் உள்ள வசதிகள் 5 பெட்ரூம், ஒரு வாஷ்ரூம் மற்றும் தனிதனியான சவர், உணவருந்தும் மேசை, மும்முனை கேஸ் பர்னர் ஸ்டவ்,பாத்திரங்கள் கழுவுமிடம்,குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, மேலும் போதுமான இடவசதி.
JCBL PLA HS 75 விலை ரூ 75 இலட்சம்.(on-road New Delhi)
JCBL PLA M742
JCBL PLA M742 மோட்டார் வீட்டில் JCBL PLA HS 75 மோட்டார் இல்லத்தில் உள்ள வசதிகளுடன் இதில் 6 பெட்ரூம், பாதுகாப்பு வசதிகள், கேப்பினை சூடேற்றும் வசதியும் உள்ளது.
JCBL PLA M742 விலை ரூ 80 இலட்சம்(on-road New Delhi)