இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களில் ரூபாய் நாற்பது ஆயிரம் விலைக்குள் அமைந்திருக்கும் சிறந்த பைக்குகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்களை காணலாம்.
சிறந்த பைக்குகள் வாங்கலாமா
பைக்குள் மற்றும் மொபட் உள்பட தொகுக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் மினி பைக் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டு மொத்தம் 5 மாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்குகள் விலை சென்னை எக்ஸ்-ஷோரூமை அடிப்படையாக கொண்டதாகும்.
1. பஜாஜ் சிடி 100
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மிக குறைந்த விலை பைக் மாடலாக விளங்கும் பஜாஜ் சிடி100 பி மற்றும் சிடி 100 பைக்குகளில் 8.08 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலான 99.27 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 4 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இருபக்க டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக் வசதியுடன் கூடிய இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.
Specifications | Bajaj CT100/CT100B |
---|---|
எஞ்சின் வகை | ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு |
எஞ்சின் சிசி | 99.27 cc |
பவர் | 8.08 bhp at 7,500 rpm |
டார்க் | 8.05 Nm at 4,500 rpm |
கியர்பாக்ஸ் | 4 வேக மேனுவல் |
எடை | 108 kg |
மைலேஜ் | 99.1 kmpl |
ஆரம்ப விலை | ரூ. 32,398 |
விலை பட்டியல்
- பஜாஜ் சிடி 100 பி – ரூ. 32,398
- பஜாஜ் சிடி 100 ஸ்போக் – ரூ.34,899
- பஜாஜ் சிடி 100 அலாய் – ரூ.36,909
2. டிவிஎஸ் ஸ்போர்ட்
டிவிஎஸ் நிறுவனத்தின் குறைந்த விலை பைக் மாடலாக வலம் வருகின்ற ஸ்போர்ட் பைக்கில் டியூரோலைஃப் 99.77 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் குறைந்த விலை பைக் மாடலாக ஸ்போர்ட் விளங்குகின்றது.
முன் பக்க டயரில் 130 மிமீ ,பின்பக்க டயரில் 110 மிமீ டிரம் பிரேக் வசதியுடன் கூடிய இந்த பைக் மாடலில் மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.
Specifications | TVS Sport |
---|---|
எஞ்சின் வகை | ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு |
எஞ்சின் சிசி | 99.77 cc |
பவர் | 7.07 bhp at 7,500 rpm |
டார்க் | 7.08 Nm at 4,500 rpm |
கியர்பாக்ஸ் | 4 வேக மேனுவல் |
எடை | 108.5 kg |
மைலேஜ் | 95 kmpl |
ஆரம்ப விலை | ரூ. 38,515 |
விலை பட்டியல்
- டிவிஎஸ் ஸ்போர்ட் கிக் ஸ்டார்ட் ஸ்போக் – ரூ. 38,515
- டிவிஎஸ் ஸ்போர்ட் கிக் ஸ்டார்ட் அலாய் – ரூ. 41,315
- டிவிஎஸ் ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் – ரூ. 47,440
3. ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்
ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் பைக் வரிசையில் மொத்தம் மூன்று விதமான மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.36 bhp பவரை வெளிப்படுத்துகின்றது.
Specifications | Hero HF-Deluxe |
---|---|
எஞ்சின் வகை | ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு |
எஞ்சின் சிசி | 97.2 cc |
பவர் | 8.36 bhp at 7,500 rpm |
டார்க் | 8.05 Nm at 4,500 rpm |
கியர்பாக்ஸ் | 4 வேக மேனுவல் |
எடை | 112 kg |
மைலேஜ் | 88.5 kmpl |
ஆரம்ப விலை | ரூ. 38,990 |
விலை பட்டியல்
- எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் ஸ்போக் – 38,990
- எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் அலாய் – 39,900
- எச்எஃப் டீலக்ஸ் கிக் ஸ்டார்ட் ஸ்போக் – ரூ. 46,180
- எச்எஃப் டீலக்ஸ் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் – ரூ. 47,198
4. டிவிஎஸ் XL100
டிவிஎஸ் எக்ஸ்எல் பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை, டிவிஎஸ் XL100 மினி லோட்மேன் மட்டுமல்ல ஆல் ரவுண்டராக வலம் வருகின்றது. இந்த மொபட்டில் 4 ஸ்டோரக் ஒற்றை சிலிண்டர் 99.7 சிசி எஞ்சின் 4.03 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.
முன்புறத்தில் 80 மிமீ டிரம் மற்றும் பின்பக்க டயரில் 110மிமீ டிரம் பெற்று இருவிதமான இருக்கை அமைப்பு கொண்ட வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கிடைக்கின்றது.
Specifications | TVS XL 100 |
---|---|
எஞ்சின் வகை | ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு |
எஞ்சின் சிசி | 99.7 cc |
பவர் | 4.03 bhp at 6000 rpm |
டார்க் | 6.05 Nm at 3,500 rpm |
கியர்பாக்ஸ் | ஆட்டோமேட்டிக் |
எடை | 80 kg |
மைலேஜ் | 67 kmpl |
ஆரம்ப விலை | ரூ. 32,398 |
விலை பட்டியல்
- டிவிஎஸ் எக்ஸ்எல் 100 விலை ரூ – 31,589
- டிவிஎஸ் எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் விலை ரூ – 31,589
5. ஹோண்டா நவி
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மினி பைக் மாடலாக விளங்கும் ஹோண்டா நவி மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19சிசி எஞ்சினை பெற்று 7.8 பிஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.
நவி மினி பைக் மாடல் வித்தியாசமான அனுபவத்தை தரும் வகையிலான அற்புதமான மினி பைக் மாடலாகும்.
Specifications | Honda Navi |
---|---|
எஞ்சின் வகை | ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு |
எஞ்சின் சிசி | 109.19 cc |
பவர் | 7.8 bhp at 7,000 rpm |
டார்க் | 8.96 Nm at 5,500 rpm |
கியர்பாக்ஸ் | ஆட்டோமேட்டிக் |
எடை | 108 kg |
மைலேஜ் | 60 kmpl |
ஆரம்ப விலை | ரூ. 44,318 |
உங்கள் சாய்ஸ் எந்த பைக் என மறக்காமல் ஒரு கமென்ட் பன்னுங்க..!