Categories: Auto News

ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு சாலையோர உதவி

ராயல் என்ஃபீல்ட்  மோட்டார்சைக்கிள் நிறுவனம் தன்னுடைய பைக்குகளுக்கு சாலையோர உதவி மையத்தினை திறந்துள்ளது. சாலையோர உதவி ( RSA- Road Side Assistance ) சேவையில் முதல் 5 வருடங்களுக்குள் உள்ள பைக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

5 வருடங்களுக்கு மேலான மோட்டார்சைக்கிள்களுக்கு இந்த வசதி பொருந்தாது மேலும் முதல் வருடத்தில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் சாலையோர வசதி வழங்கப்படும். 1 வருடத்திலிருந்து 3 வருடங்கறுக்குள் இருக்கும் பைக்குகளுக்கு  சாலையோர வசதி கட்டணம் ரூ.800 செலுத்த வேண்டும்.

சாலையோர வசதியை 3 முதல் 5 வருடங்களுக்குள் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளை இயக்கமுடியாத நிலையில் இருந்தால் அருகில் உள்ள ராயல் என்ஃபீல்ட் சர்வீஸ் சென்டருக்கு இலவசமாக  எடுத்து செல்லப்படும்.இந்த தொலைவு சர்வீஸ் மையத்திலிருந்து 100 கிமீ தொலைவுக்கு மட்டுமே பொருந்தும் அதற்கு மேல் தொலைவு இருந்தால் கட்டனம் வசூலிக்கப்படும்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய இயலும் எனில் அந்த இடத்திலே சரிசெய்து தரப்படும். மேலும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பஞ்சர் , பேட்டரி இழப்பு , எரிபொருள் காலி போன்றவை சாலையோர வசதியில் செய்துகொள்ள இயலும்.

ராயல் என்ஃபீல்ட் RSA மையத்தை தொடர்பு கொள்ள ; 1800-2100-007