யமஹா M – Slaz பைக் இந்தோனேசியா தாய்லாந்து மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யமஹா எம் ஸ்லாஷ் பைக் R15 பைக்கை அடிப்படையாக கொண்ட மாடலாகும். M – Slaz பைக்கில் ஆர்15 யில் உள்ள 150சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ளது.
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்கும் M-Slaz பைக் இளம் வாடிக்கையார்களை வெகுவாக கவரும் வகையில் மிரட்டலான எல்இடி முகப்பு விளக்குகள் , ஸ்டைலிசான் பெட்ரோல் டேங்க் , பாடி கிராஃபிக்ஸ் ஸ்பிளிட் இருக்கைகள் , இரட்டை ஸ்போக்கினை கொண்ட அலாய் வீல் , எல்இடி டெயில் விளக்குகள் என மிக நேர்த்தியாக எம் ஸ்லாஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யமஹா M-Slaz பைக்
பரிமாணங்கள்
- நீளம் 1955மிமீ
- அகலம் 795மிமீ
- உயரம் 1065மிமீ
- வீல்பேஸ் 1350மிமீ
- இருக்கை உயரம் 805மிமீ
- கிரவுண்ட் கிளியரன்ஸ் 164மிமீ
- முன் டயர் 110/70/R17
- பின் டயர் 130/70/R17
என்ஜின்
ஆர் 15 பைக்கில் உள்ள அதே 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கம்பெரஷன் ரேசியோ 10.4:1 ஸ்டோர்க் மற்றும் போர் நீளம் 57.7×58.7 இதன் மூலம் ஆற்றல் அதிகரிக்கப்படிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் எம் ஸ்லாஷ் பைக் காட்சிக்கு வரலாம் . அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருமா என்பது உறுதியாக தெரியவரும். இதன் விலை தாய்லாந்தில் இந்திய மதிப்பின் படி ரூ.1.66 லட்சம் ஆகும்.
Yamaha M-Slaz naked street fighter launched in Thailand