மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி வரும் அக்டோபர் 14ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்றது. தற்பொழுது விற்பனையில் உள்ள எம் கிளாஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக GLE எஸ்யூவி வரவுள்ளது.
![]() |
மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி |
2015ம் ஆண்டில் 15 மாடல்களை களமிறக்க உள்ள நிலையில் இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி 14வது மாடலாக களமிறங்க உள்ளது.
தோற்ற அமைப்பிலும் உட்புறத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கும். மேலும் இந்த சொகுசு எஸ்யூவி காரில் பல நவீன வசதிகளுடன் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் வரலாம்.
258பிஎச்பி ஆற்றலை வழங்கும் 3.0 லிட்டர் டீசல் மற்றும் 203பிஎச்பி ஆற்றலை வழங்கும் 2.1 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டிலுமே 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
வரவிருக்கும் GLE எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் ஆடி க்யூ7 , பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 போன்ற கார்கள் சவாலாக விளங்கும்.
Mercedes-Benz GLE SUV to launch on October 14 , 2015