மெர்சிடிஸ் பென்ஸ் GLC தோற்றம்
மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யூவி முகப்பில் இரண்டு ஸ்லாட்களுக்கு மத்தியில் மெர்சிடிஸ் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. முப்பரிமான ரேடியேட்டர் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக்கிங் முகப்பு விளக்குகள் மற்றும் ஆப்ஷனலாக எல்இடி விளக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பக்கவாட்டில் உள்ள புரொஃபைல் கோடுகள் ,கருப்பு மேட் கிளாடிங் , 20 இஞ்ச் ஆலாய் வில் ஆகியவை சிறப்பான தோற்ற பொலிவினை வழங்குகின்றது.
பின்புறத்தில் உள்ள பம்பர் இரட்டை குரோம் பூச்சு புகைப்போக்கி , எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி இன்டிரியர்
மெர்சிடிஸ் பென்ஸ் GLC காரின் உட்புறத்தில் பெரும்பாலான பகுதிகளை சி- கிளாஸ் செடான் காரில் இருந்து பெற்றுள்ளது. கமான்டு தொடுதிரை அமைப்பு , லெதர் அப்ல்சரி , ஸ்டைலான ஸ்டீயரிங் வீல் போன்றவற்றை கொண்டுள்ளது. சன்ரூஃப் , ஏர் ஃபீல் கேபின் போன்றவற்றை ஆப்ஷனாலாக பெறலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் GLC என்ஜின்
2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு விதமான பவர் ஆப்ஷனில் கிடைக்கின்றது. GLC 250 பெட்ரோல் மாடலில் 211எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 350என்எம் ஆகும். GLC 350e ஹைபிரிட் பெட்ரோல் மாடலில் 327எச்பி ஆற்றலை தரும்.
GLC 220d டீசல் மாடலில் 170எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 400என்எம் ஆகும். GLC 250d டீசல் மாடலில் 204எச்பி ஆற்றலை தரும் இதன் முறுக்கு விசை 500என்எம் ஆகும்.
அனைத்து மாடலிலும் 9G-ட்ரானிக் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். GLC 350e ஹைபிரிட் மாடலில் மட்டும் 7G-ட்ரானிக் ப்ளஸ் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
GLC எஸ்யூவி சிறப்பம்சங்கள்
பென்ஸ் ஜிஎல்சி காரில் ஏர் சஸ்பென்ஷன் பாடி கன்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தின் கிரவுண்ட் கிளியரண்சை ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடுக்கு தகுந்தாற்போல் 15மிமீ முதல் 50மிமீ வரை உயர்த்த முடியும்.
டைனமிக் செலக்ட் மூலம் 5 விதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது. அவை ஈக்கோ, கம்ஃபோர்ட் , ஸ்போர்ட் , ஸ்போர்ட் + மற்றும் இன்டிடூவல் ஆகும். அனைத்து வேரியண்டில் 4மேட்டிக் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தர அம்சமாக உள்ளது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் MRA (Modular Rear Architecture) தளத்தில் ஜிஎல்சி எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளத்தில்தான் C-கிளாஸ் செடானும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
Mercedes-Benz GLC SUV unveiled