மெர்சிடிஸ் பென்ஸ் இ சீரிஸ் காரின் மிகுந்த சக்தி வாய்ந்த இ63 ஏஎம்ஜி செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ.1.29 கோடியாகும்.
இ63 ஏஎம்ஜி காரில் மிகுந்த சக்தி வாயந்த 5.5 லிட்டர் டிவின் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 557பிஎச்பி மற்றும் டார்க் 720என்எம் ஆகும். முந்தைய இ63 ஏஎம்ஜி காரை விட கூடுதலாக 37பிஎச்பி ஆற்றல் கிடைக்கும். 7 ஜி வேக ட்ரானிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இ63 ஏஎம்ஜி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆகும்.
முந்தைய இ63 காரைவிட ஸ்டைல் போன்றவற்றில் பல மாற்றங்களை பென்ஸ் கொடுத்துள்ளது. மிக ஸ்டைலான முகப்பு மேலும் மேம்படுத்தப்பட்ட சொகுசு வசதிகளுடன் வந்துள்ளது. சக்கரங்களில் ஏஎம்ஜி முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி காரின் விலை ரூ 1.29 கோடி(டெல்லி விலை)