மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் GT-S ஸ்போர்ட்ஸ் கார் நாளை டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏஎம்ஜி ரக பெர்ஃபாமென்ஸ் மாடலான ஜிடி எஸ் காரின் பெரும்பாலான தாத்பரியங்கள் பிரபலமான எஸ்எல்எஸ் ஏஎம்ஜி மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.
510பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 4.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 650என்எம் ஆகும். இதில் 7 வேக இரட்டை கிள்ட்ச் கியர்பாக்ஸ் உள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 3.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் AMG GT-S காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.
சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுவதனால் ரூ.2 கோடியில் விற்பனைக்கு வரலாம்.
Mercedes AMG GT-S sportscar launch tommrow