மாருதி சுஸூகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வரும் அக்டோபர் 26ந் தேதி விற்பனைக்கு வரலாம். மாருதி சுஸூகி பலேனோ கார் ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலை நிறத்தப்பட உள்ளது.
மாருதி சுஸூகி பலேனோ கார் |
பிரிமியம் ரகத்தில் வரவுள்ள பலேனோ கார் மாருதி நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. ஜாஸ் , எலைட் ஐ20 , போலோ போன்ற கார்களுக்கு மாருதி சுஸூகி பலேனோ சவாலினை தரவல்லது.
பலேனோ கார் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
- மாருதி சுஸூகி பலேனோ கார் பிரிமியம் ரக ஹேட்ச்பேக் மாடலாக விளங்கும். இதனால் மாருதி நெக்ஸா டீலர் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
- சுஸூகி பலேனோ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
- மாருதி பலேனோ காரில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் மற்றும் மைலேஜ் போன்றவை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.
- பலேனோ காரில் 1.3 லிட்டர் SHVS ஹைபிரிட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இதன் மைலேஜ் சியாஸ் காருக்கு இணையாக இருக்கும். அதாவது லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரலாம்.
- 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- இதன் பூட் ஸ்பேஸ் 355 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.
- இரண்டு முன்பக்க காற்றுப்பைகள் போன்றவை பேஸ் வேரியண்ட் தவிர்த்து நிரந்தர அம்சமாக இருக்கும்.
- நடுத்தர வேரியண்டில் இருந்து ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் ஆப்ஷன் இருக்கும்.
- ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றிருக்கும். இதன் மூலம் ஆப்பிள் கார் பிளே தொடர்பினை பெற்று கொள்ள இயலும்.
- பலேனோ உட்புறம் மிக பிரிமியம் தோற்றத்தில் சிறப்பாக அமைந்திருக்கும்
- காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் பிரிவில் வரவுள்ள பலேனோ காரின் சக போட்டியாளர்கள் ஜாஸ் , எலைட் ஐ20 மற்றும் போலோ ஆகும்.
- மாருதி சுஸூகி பலேனோ கார் விலை ரூ.5.20 லடசம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வரலாம்.
- வரும் அக்டோபர் 26ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் மாருதி பெலேனோ காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மாருதி நெக்ஸா வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
Maruti Suzuki Baleno important facts