மாருதி சுசூகி பலேனோ |
வரும் 2020ம் ஆண்டிற்க்குள் சுசூகி நிறுவனம் 20 கார்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்த உள்ளது. அவற்றில் இருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட 15 கார்கள் அதாவது சொகுசு கார்கள் உள்பட மாருதி சுசூகி வழியாக இந்தியா வரவுள்ளது.
வரும் 2025ம் ஆண்டிற்க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உருவாகவுள்ள இந்தியாவில் அதிக முதலீடுகள் மற்றும் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் சொகுசு கார் சந்தை வலுபெற்று வருவதனால் அதற்க்கு ஏற்றார் போல புதிய சொகுசு கார்களை மாருதி உதவியுடன் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளோம் என சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார்.
மாருதி நிறுவனம் புதிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை ஹரியானா மாநிலம், ரோடக்கில் அமைத்து வருகின்றது. இதன் மூலம் மாருதி தன்னிச்சையாக மாடல்களை உருவாக்க துவங்கும் . மேலும் இதில் சுசூகி நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது.
Maruti Suzuki to launch 15 new models in India at 2020