மாருதி சுஸூகி எஸ் க்ராஸ் காரில் பிரச்சனை உள்ள பிரேக்கினை நீக்குவதற்காக சுமார் 20,247 கார்கள் திரும்ப அழைக்கின்றது. மாருதி சுஸூகி நெக்ஸா ஷோரூம் வழியாக மாருதி எஸ் க்ராஸ் விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த 20 ஏப்ரல் 2015 முதல் 12 பிப்ரவரி 2016 வரை தயாரிக்கப்பட்ட DDiS200 மற்றும் DDiS320 வேரியண்ட்களில் பிரேக் பிரச்சனை உள்ளது. எவ்விதமான கட்டனமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது.
உங்ளில் வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா என அறிவதற்கு நெக்ஸா இணையதளத்தில் சென்று உங்களின் வாகனத்தின் வின் நெம்பரினை கொண்டு தெரிந்து கொள்ளலாம், வின் நம்பர் MA3 என தொடங்கும்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரிமியம் கார்களுக்காக தொடங்கப்பட்ட நெக்ஸா ஷோரூமில் விற்பனைக்கு வந்த க்ராஸ்ஓவர் மாடலான எஸ் க்ராஸ் கார் பெரிதான வெற்றியை பெறவில்லை. எஸ் க்ராஸ் காரின் போட்டியாளர்கள் டஸ்ட்டர் , டெரோனோ மற்றும் ஈக்கோஸ்போர்ட் கார்களுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது.