1500 கோடி முதலீட்டில் தயாராகி வருகின்ற மஹிந்திரா U321 எம்பிவி சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னோவா க்றிஸ்ட்டா காருக்கு எதிரான போட்டியாக நிலைநிறுத்தப்பட உள்ளது.
மஹிந்திரா U321
வடஅமெரிக்காவில் அமைந்துள்ள மஹிந்திராவின் தொழிற்நுட்ப பிரிவின் முதல் மாடலாக உருவாக்கப்பட்டு வருகின்ற புதிய ரக எம்பிவி மாடல் க்றிஸ்ட்டா காருக்கு எதிராக பல்வேறு பிரிமியம் அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.
மோனோகூ பாடியுடன் தயாராகி வருகின்ற இந்த காரில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் அல்லது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக சாங்யாங் நிறுவனத்தின் சார்பாக புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன் கொண்டதாக வரக்கூடிய இந்த மாடலில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் போன்ற ஆப்ஷன்களை அடிப்படையாக அனைத்து வேரியன்டிலும் இடம்பெற்றிருக்கும்.
image source – iab