மஹிந்திரா நிறுவனம் விவசாய கருவிகளை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாகும். கடந்த 29 ஆண்டுகளாக சந்தையில் அசைக்க முடியாத டிராக்டர் நிறுவனமாக வலம் வருகிறது.
கடந்ந 2004 ஆம் ஆண்டில் 10 இலட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்தது.தற்பொழுது மும்பை அருகே உள்ள ஆலையில் 27.02.2013 அன்று 20 இலட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்துள்ளது.
15எச்பி முதல் 90எச்பி வரை டிராக்டர் உற்பத்தி செய்கின்றது. இந்த டிராக்டர்கள் 40 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியா முழுவதும் 5 டிராக்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் வெளிநாடுகளில் 10 தொழிற்சாலைகள் உள்ளன.