மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் ஆப்பிள் பயனர்களுக்காக பூளூ சென்ஸ் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பே ஆண்ட்ராய்டு மற்றும் வின்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கின்றது.
இந்த ஆப்யை பூளூடுத் இணைப்பு மூலம் உங்கள் எக்ஸ்யூவி500 காரில் இணைத்து கொண்டால் இன்ஃபோடேன்மென்ட் மற்றும் ஏசி கன்ட்ரோல் வசதிகளை கட்டுப்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரீமைன்டர் , டயர் பிரஷர் , எரிபொருள் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.
மஹிந்திரா எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ்களின் மூலம் வாடிக்கையாளரகளுக்கு சிறப்பான சேவை மற்றும் தகவல்களை வழங்கும் என ராஜன் வதேரா (சீஃப் எக்ஸ்கூட்டிவ் டிரக் மற்றும் பவர்டெரியன் தலைவர்) தெரிவித்துள்ளார்.
ஸ்கார்பியோ எஸ்யூவி காருக்கும் இந்த ஆப்ஸ் கிடைக்கின்றது.