மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களில் ஓட்டுநர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும் வகையில் ஆட்டோமொட்டிவ் அலையன்ஸ் ( Open Automotive Alliance) அமைப்பின் ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருள் குழுமத்தில் இணைந்துள்ளது.
ஆட்டோமொட்டிவ் அலையன்ஸ் கூட்டமைப்பு கார் ஓட்டுநர்களுக்கு சிறப்பான நவீன வசதிகள் மற்றும் உதவியை தரும் வகையில் உருவாக்கியுள்ள மென்பொருள்தான் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகும்.
முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜிஎம் , ஆடி , ஹூண்டாய் , ஹோண்டா மற்றும் கூகுள் , நிவ்டியா கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த ஆட்டோமோட்டிவ் சாஃப்ட்வேர் கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ , ஆடி , ஃபியட் , பென்ட்லி , வால்வோ , போர்டு என 28க்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனமும் இணைந்துள்ளது.
ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருள் மூலம் கூகுளின் மேப் முதற்கொண்டு பல வசதிகளை பயன்படுத்த முடியும். எக்ஸ்யூவி 500 மற்றும் ஸ்கார்பியோ மாடலில் முதற்கட்டமாக இந்த சேவையை வழங்க உள்ளனர்.
Mahindra joins Open Automotive Alliance