மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு மேக்சிமோ ப்ளஸ் எல்சிவியை அறிமுகம் செய்தததை பதிவிட்டிருந்தேன். மஹிந்திரா மேக்சிமோ ப்ளஸ் இலகுரக டிரக்கில் உள்ள சிறப்பம்சம்தான் ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜி ஆகும்.
ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை கொண்டு 10% எரிபொருளின் செயல்பாட்டினை அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ஒரு பட்டனில் இயங்க்கூடிய வடிவில் இருக்கின்றது.
ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜியில் இரண்டு ஆப்ஷன் உள்ளது. அவை
1. ஈகோ
ஈகோ ஆப்ஷன் மிக சிறப்பான மைலேஜ் வழங்க்கூடியதாகும்.
2. பவர்
பவர் ஆப்ஷன் எஞ்சினின் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தும்.
இந்த நுட்பம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேக்சிமோ ப்ளஸ் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுட்பத்தை தனது எஸ்யூவி கார்களிலும் (ஸ்கார்பியோ,எக்ஸ்யூவி)கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃப்யூல் ஸ்மார்ட் டெக்னாலஜியை உருவாக்க ரூ 10 கோடி செலவு செய்துள்ளது. இந்த நுட்பத்திற்க்கு பேட்டன்ட பெற முயன்று வருகின்றது.