அறிமுகம் செய்த இரண்டு வருடங்களில் 74,000த்திற்க்கு அதிகமான எக்ஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரி உயர்வினால் சற்று விற்பனை தளர்வினை சந்தித்தாலும் தற்பொழுது அதனை ஈடுகட்டவும் ரெனோ டஸ்டர், டெரோனோ, ஈக்கோஸ்போர்ட் போன்ற கார்களுக்கும் சவாலினை தரக்கூடிய வகையில் டபிள்யூ4 என்ற வேரியண்டினை விற்பனைக்கு வந்துள்ளது.
என்ஜின்யில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. 2.2 லிட்டர் எம்ஹவாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 140பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் முடுக்கி பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
எல்இடி முகப்பு விளக்குகள், டூவல் காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிடி போன்ற வசதிகள் சென்ட்ரல் லாக்கிங், 6 வகை சீட் அட்ஜஸ்மென்ட கொண்டுள்ளது, எலக்ட்ரிக் வீங் மீரர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை விபரம் (மும்பை விலை)
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ4 ரூ.10.83 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ6 ரூ.11.90 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ8 ரூ.13.49 லட்சம்(முன் வீல் டிரைவ்)
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டபிள்யூ8 ரூ.14.55 லட்சம்(ஆல் வீல் டிரைவ்)