தண்ணிரால் சுத்தம் செய்தால் பைக் வாசிங் செய்தது போல தெரியவில்லையா ? கவலைய விடுங்க சில எளிய வழிமுறைகள் மூலம் பைக்கினை புத்தம் புதிதாக பராமரித்து கொள்ளலாம்.
உங்கள் பைக் உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை. அப்ப எப்படி பராமரிக்கலாம் ?
அவசியமானவை என்ன ?
1. தண்ணிர்
2. பைக் வாஸ் சாம்பூ
3. மெழுகு
4. ஸ்கிரப் மற்றும் தூய்மையான கிளாஸ் துடைக்கும் துணி
எல்லாம் ரெடியா ? என்ன செய்யலாம்
1. மிக சிக்கனமாக தண்ணிரை பயன்படுத்தி பைக்கினை வாஷ் செய்யுங்கள். எலக்ட்ரிக் பாகங்கள் மற்றும் பேட்டரி போன்றவற்றில் அதிகப்படியான தண்ணிரை பயன்படுத்தாதீர்கள்.
சாம்பினை கொண்டு டஸ்ட் மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்கலாம். மிக அதிகப்படியான சாம்பினை பயன்படுத்தாதீர்கள். அது பெயிண்டினை அதிகம் பாதிக்கும்.
தூய்மையான துணி கொண்டு எந்த இடத்திலும் நீரை தங்க விடாதீர்கள். குறிப்பாக எரிபொருள் கலனில் உள்ள மூடியும் திறக்கும் பகுதியில் தூய்மையாக சுத்தம் செய்யுங்கள்.
பேட்டரி டெரிமினல் , ஸ்பார்க் பிளக் , என்ஜின் பகுதிகள் என முக்கியமானவற்றில் தண்ணிர் தேங்காமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அது துருபிடித்து பெரும் பிரச்சனையாகி விடும்.
2. மெழுகு அல்லது பாலிஷ்
இணையதள சந்தைகள் அல்லது உங்கள் அருகாமையில் உள்ள மோட்டார் பாகங்கள் விற்பனை மையத்தில் மிக பிரபலமான மெழுகு அல்லது பாலிஷ் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றது.
மெழுகு அல்லது பாலிஷ் கொண்டு பைக்கின் பாடி முழுவதும் பூசி விடுங்கள். பூசி விட்டு15 முதல் 20 நிமிடங்கள் வரை கடந்த பின்னர் பின்பு மென்மையான கிளாஸ் கீளினிங் துணி கொண்டு மிக மென்மையாக துடையுங்கள்.
ஏன் மென்மையான கிளாஸ் கீளினிங் துணியை பயன்படுத்த வேண்டுமென்றால் கீறல்களை பெரிதாக தடுத்த நிறுத்தலாம்.
உங்க விருப்பமான பைக்கினை மிக அழகாக புதிது போன்று வைத்துக்கொள்ள வாரத்தில் ஒரு நாள் உங்கள் நேரத்தினை செலவு செய்யலாமா ?
பைக் பாலிஷ் பொருட்களை ஆன்லைனில் 30 சதவீத சலுகை விலையில் வாங்க க்ளிக் பன்னுங்க
Bike Polishing tips