4 வது வருட பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சி வரும் 2015 ஜனவரி 15 முதல் 17 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மாடர்ட்டில் நடைபெற உள்ளது.
பஸ் மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியில் புதிய பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் ஹைபிரிட் பேருந்துகள், கஸ்டமைஸ் பஸ், பள்ளி பேருந்துகள் இலகுரக வாகனங்கள், எஸ்யூவி, எம்யூவி, வேன், பிக்அப் டிரக் மற்றும் கனரக வாகனங்கள் காட்சி மற்றும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
மேலும் இந்த கண்காட்சியில் வங்கி கடன், டயர், டீயூப், பேட்டரி மற்றும் பேருந்து சார்ந்த உதிரிபாகங்கள் காட்சிக்கு வைக்கபடும்.
பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியை சியாம் வழங்குகின்றது.