மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சூப்பர்ப் கார் விஷன் சி கான்செப்டின் அடிப்படையாக கொண்டு வடிவமைத்துள்ளனர்.
புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் முந்தைய மாடலைவிட 20மிமீ நீளம் மற்றும் 50மிமீ அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீல்பேஸ் 80மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலான இடவசதியை சூப்பர்ப் காரில் பெறமுடியும்.
மிகவும் அழகான தோற்றத்தினை கொண்டுள்ள சூப்பர்ப் காரில் முகப்பு விளக்கு புதுவிதமான வடிவமைப்புடன் விளங்குகின்றது.
மேலும் பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்ட உட்ப்புறத்தினை பெற்றுள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்கள் , கொலம்பஸ் எல்டிஇ தொடர்பு, டைனமிக் க்ரூஸ் கன்ட்ரோல் , பானரோமிக் சன்ரூஃப் , ஆட்டோ ஏசி , மழை மற்றும் விளக்குகளுக்கு சென்சார் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.
மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தினை வழங்ககூடிய என்ஜினாக மேம்படுத்தியுள்ளது. பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களை கொண்ட சூப்பர்ப் காரில் 5 பெட்ரோல் என்ஜின் மற்றும் மூன்று டீசல் என்ஜின் வகைகளில் கிடைக்கபெறும். டிஎஸ்ஜி ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு வரும்.
சூப்பர்ப் கார் மிக கடுமையான போட்டியை அக்கார்டு , ஸ்னாட்டா . மற்றும் கேம்ரி கார்கள் சந்திக்க உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.