மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி டெயில்கேட்டில் உள்ள ஸ்பேர் வீலை நீக்கப்படமாட்டாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டெயில்கேட்டில் உள்ள ஸ்பேர் வீல் நீக்கப்பட்ட மாடலின் சோதனை ஓட்ட படங்கள் வெளிவந்திருந்தது. அவை ஐரோப்பா சந்தைஏற்றுமதிக்கு செய்யப்படும் ரன் ஃபிளாட் டயர்கள் பொருத்தப்பட்ட மாடல் என்பதால் ஸ்பேர் வீல் நீக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசல் என்ஜின் ஆற்றல் 90பிஎச்பிலிருந்து 98.6 பிஎச்பி 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்த உள்ளனர். இதே என்ஜின்தான் வரவிருக்கும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காரிலும் பொருத்தப்பட உள்ளது.
உட்புறத்தில் சில மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை பெற்றிருக்கலாம் என தெரிகின்றது. வரும் பண்டிகை காலத்திற்க்கு முன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி வரலாம்.
updated ford Ecosport SUV coming soon