இங்கிலாந்தினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் (BSA) நிறுவனத்தை மஹிந்திரா குழுமத்தின் அங்கமான கிளாசிக் லெஜென்ட்ஸ் பிரைவேட் லிமிட்.. ரூ.28 கோடிக்கு வாங்கியுள்ளது.
1910 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் BSA (Birmingham Small Arms) நிறுவனம் கிளாசிக் ரக தோற்றத்தில் மோட்டர்சைக்கிள்கள் மற்றும் சிறப்பு கஸ்டமைஸ் பைக்குகளை வடிவமைப்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலே பைக்குகளை விற்பனை செய்து வரும் பிஎஸ்ஏ நிறுவனம் தற்பொழுது இங்கிலாந்து , ஜப்பான் ,அமெரிக்கா , சிங்கப்பூர் , மலேசியா , மெக்சிக்கோ மற்றும் கனடா போன்ற நாடுகளில் பிஎஸ்ஏ பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் (Classic Legends – CLPL) நிறுவனத்தின் வாயிலாக பிஎஸ்ஏ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை அதாவது 34 லட்சம் பவுண்டுகளை (ரூ.28 கோடி) வாங்கியுள்ளது. பிஎஸ்ஏ பிராண்டிலே தொடர்ந்து மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.
மஹிந்திரா அன்ட் மஹிந்திரா குழுமம் தொடர்ச்சியாக சில ஆண்டுகளாகவே பல முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்தி வந்துள்ளது. அவை தென்கொரியாவின் சேங்யாங் மோட்டார் நிறுவனம் , ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனம் , SYM டூ வீலர்ஸ் , பீஜோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் பிரசத்தி பெற்ற டிசைன் ஸ்டூடியோ பினின்ஃபாரீனா போன்றவற்றை வாங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கையில் முழுமையாக வந்துடைந்துள்ள பிஎஸ்ஏ நிறுவன பைக்குகள் இந்தியா வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.