சென்னை ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் இந்திய வர்த்தக வாகன பிரிவின் (DICV) பாரத் பென்ஸ் பேருந்து பிரிவில் பேருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளனர்.
குறைந்த தொலைவு பயணிப்பதற்க்காக முன்புறம் என்ஜின் பொருத்தப்பட்ட பள்ளி , ஊழியர்கள் , சுற்றுலா போன்ற சேவைகளுக்கான பேருந்துகளை பாரத் பென்ஸ் உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்த தொழிற்சாலையில் 9 , 16 மற்றும் 16 டன்னுக்கு மேற்பட்ட பேருந்துகள் தயாரிக்க உள்ளனர்.
ரூ.425 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையில் ஆண்டிற்க்கு 1500 பேருந்துகள் தயாரிக்க முடியம். முழு உற்பத்தியை எட்டும்பொழுது ஆண்டிற்க்கு 4000 பேருந்துகள் வரை தயாரிக்கலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் பெயரில் தயாரிக்கப்படும் பேருந்துகள் புறநகர் சொகுசு போக்குவரத்தினை மையமாக வைத்து விற்பனை செய்யப்படும். இந்திய சந்தையில் பாரத் பென்ஸ் பேருந்துகள் சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான பராமரிப்பு செலிவினை கொண்டவையாக இருக்கும்.
Chennai Daimler plant starts production of BharatBenz buses