Maruti Suzuki swift crash test |
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கார் விற்பனையில் அசாம் மாநிலத்தின் பங்கு 12 சதவீதமாக உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற கார்கள்கள் என குளோபல் என்சிஏபி மையத்தால் மதிப்பிடப்பட்ட அதிக விற்பனையாகும் சிறிய ரக கார்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச தரமுள்ள கார்களை மட்டுமே அசாம் மாநிலத்தில் விற்பனை செய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது. இந்திய கார் நிறுவனங்களின் பாதுகாப்பிற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.
மாருதி ஆல்ட்டோ 800 , ஸ்விஃப்ட் , ஐ10 , இயான் , டட்சன் கோ , ஜாஸ் மேலும் பல கார்கள் யூரோ குளோபல் என்சிஏபி தர நிர்னையத்தை எட்டாமல் பூஜ்ய தரத்தினை பெற்றுள்ளது. சிறிய கார் அதாவது 1500 கிலோ எடையுள்ள கார்கள் மற்றும் குவாட்ரிசைக்கிள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
அசாம் மலைகள் நிறைந்த பிரதேசம் என்பதனால் யூரோ தர விதிகளின் படி சோதனையில் சிறப்பான தரத்தினை பெற்றிருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனவே இந்த தடையால் 140க்கு மேற்பட்ட கார்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் காம்பேக்ட் எஸ்யூவிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார் நிறுவனங்கள் விற்பனையில் கடும் இழப்பினை ஏற்படுத்தியுள்ளன.
இடைக்கால தடை விதிக்கப்படுள்ளதை தொடர்ந்து இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி கார் நிறுவனங்கள் அளித்துள்ள பதில் வழக்கம் போல இந்திய தரம் வேறு யூரோ தரம் வேறு என்பதுதான்.
2017ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி முதல் க்ராஷ் டெஸ்ட் சோதனைகள் இந்தியாவில் செய்யப்பட உள்ளது. இதில் தேர்வு பெறும் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
Assam Bans fails crash test Cars