குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டாடா ஸ்கூல்மேன் நுட்பம் பல சிறப்பம்சங்ளை கொண்டுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா அல்ட்ரா சேஃப் ஸ்கூல் பஸ் மாடலில் இந்த பாதுகாப்பு டிராக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக்கியுள்ளது மற்ற பேருந்துகளுக்கு வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப அம்சங்களாக இணைத்துள்ளது.
ஸ்கூல்மேன் டிராக்கிங் சிஸ்டம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கியுள்ள ஸ்கூல்மேன் நுட்பத்தில் ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கு ஒருமுறை பள்ளி வாகனம் இருக்கும் இடத்தை மேம்படுத்தி கொண்டிருக்கும்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஸ்கூல்பஸ் எங்கே உள்ளது எந்த சாலையில் பயனித்து கொண்டிருக்கின்றது போன்ற விபரங்களை உடனுக்குடன் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் இட வரைபடத்தின் மூலமோ அல்லது அப்ளிக்கேஷன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். மேலும் குறிப்பிட்டுள்ள பகுதிக்கு மட்டும் வாகனம் செல்லும் வகையில் நாம் உருவாக்கி கொள்ளமுடியும்.
பள்ளி வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் பேருந்துகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.
Tata launches skoolman tracking telematics for student saftey purposes