பஜாஜ் நிறுவனத்தின் மிக சிறப்பான ஸ்போர்டிவ் பைக்கான பல்சர் 200 என்எஸ் இரட்டை வண்ணங்கள் கொண்ட பைக்காக விற்பனைக்கு வந்துள்ளது. தற்ப்பொழுது மஞ்சள் நீளம், கருப்பு மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்களில் விற்பனையில் உள்ளது.
இரட்டை வண்ணங்கள் கலந்த கலவையாக பல்சர் 200என்எஸ் விற்பனைக்கு வந்துள்ளது. வெள்ளை வண்ணத்தில் சிவப்பு கலவை மற்றும் சிகப்பு வண்ணத்தில் வெள்ளை ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும்.
முந்தைய விலையை விட ரூ.1000 கூடுதலான விலையில் கிடைக்கும்.
200சிசி திரவம் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 23.5 பிஎச்பி மற்றும் டார்க் 18.3 என்எம் ஆகும். 6 வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய இரட்டை வண்ண பல்சர் 200என்எஸ் இந்த மாதத்தின் இறுதியில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும்.
பஜாஜ் பல்சர் 200என்எஸ் விலை ரூ.87,794 (எக்ஸஷோரூம் டெல்லி)