பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணம் காட்டி அனுமதி அளிக்ககூடாது என சில நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறைவான பாதுகாப்பு காரணம் காட்டப்பட்டாலும் ஆட்டோரிக்ஷாவை விட கூடுதலான பாதுகாப்பு வசதியாக இருக்கும் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதனால் பஜாஜ் விரைவில் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
ஆட்டோரிக்ஷாவிற்க்கு மாற்றாக விளங்கும் என்பதால் ஆண்டுக்கு 60,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். கார்பன் வாயு குறைவாக வெளியிடும் என்பதால் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பினை தரும். தற்பொழுது சோதனையில் உள்ள ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரும். பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது.