பஜாஜ் ஆர்இ60 விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். ஆட்டோரிக்ஷாவுக்கும் காருக்கும் இடைப்பட்ட நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் என அழைக்கப்படுகின்றது.
பஜாஜ் ஆர்இ60 யூரோ iv விதிகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்பன்டைஆக்ஸைடு குறைவாக வெளியிடும். ஆர்இ60 குவாட்ரிசைக்கிளில் 216 சிசி DTSi பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 20 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
1 லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் கிடைக்கும். உச்சகட்ட வேகம் மணிக்கு 70 கிமீ ஆகும். 450 கிலோ எடையுடன் இருக்கும்.
இந்தியாவில் குவாட்ரிசைக்கிள் புதுவகையான வாகனம் என்பதால் இதனை எந்த பிரிவில் அனுமதி வழங்குவது என மத்திய அரசு ஆலோசித்து வருகின்றதாம். இதனால் வெளிவருவதனில் சற்று தாமதம் ஆகின்றதாம். இந்த வருடத்தின் மத்தியில் அல்லது இறுதிக்குள் வெளிவரலாம் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.