பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்கில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவென்ஜர் 150 , அவென்ஜர் 200 மற்றும் அவென்ஜர் 220 என மூன்று விதமான ஆப்ஷனில் வரவுள்ளது.
பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 200 பைக் |
வரும் 27ந் தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய பஜாஜ் அவென்ஜர் மாடலில் 150 சிசி தொடக்க நிலை மாடல் மிக விலை குறைவான க்ரூஸர் ரக மாடலாக விளங்க உள்ளது.
மேலும் அவென்ஜர் ஸ்டீரிட் 200 , அவென்ஜர் ஸ்டீரிட் 220 , அவென்ஜர் க்ரூஸ் 200 மற்றும் அவென்ஜர் 150 என மொத்தம் 4 விதமான வேரியண்டில் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் புதிய அவென்ஜர் க்ரூஸர் வரவுள்ளது. அவென்ஜர் 150 மாடல் வந்தால் சந்தையிலே விலை குறைவான க்ரூஸர் என்ற பெயரினை பஜாஜ் அவென்ஜர் பெறும்.
மேலும் படிக்க ; பஜாஜ் அவென்ஜர் பைக் ஸ்பை படங்கள்
புதிய பஜாஜ் அவென்ஜர் தொடக்க விலை ரூ.80,000 முதல் 1,10,000 த்திற்க்குள் 4 வேரியண்ட் விலையும் அடங்கலாம்.
Bajaj avenger 150 coming soon