ஸ்டைல் எம்பிவியை தொடர்ந்து நிசான் எவாலியோ எம்பிவி காரின் உற்பத்தியை நிசான் நிறுத்தியுள்ளது. பெரிதாக வரவேற்பினை பெறாத எவாலியா காரினை சந்தையில் இருந்து நிசான் விலக்கியுள்ளது.
எதிர்பாரத விதமாக பாக்ஸ் வடிவ வாகனம் என்பதால் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் எவாலியா இடம்பிடிக்க தவறிய காரணத்தால் இந்திய சந்தையிலு இருந்து எவாலியா காரை விலக்கி கொள்வதாக நிசான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எவாலியா எம்பிவி காரினை ஸ்டைல் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வந்த அசோக் லேலண்ட் கடந்த மாதம் உற்பத்தியை நிறுத்தியது.
2012ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த எவாலியா இதுவரை 2412 வாகங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2013ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த அசோக் லேலண்ட் ஸ்டைல் 1154 வாகனங்களை விற்பனை செய்தது.
Nissan Evalia MPV discontniued in Indian market