1. அசோக் லைலேன்ட் புதிய லாரிகளை அறிமுகம் செய்துள்ளது.அவை 2516il twin speed மற்றும் 3118il twin speed ஆகும்.
2. மஹிந்திரா சாங்யாங் ரெஸ்டான் (Ssangyong Rexton SUV) கார் மும்பை மற்றும் டில்லியில் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வருகிற நவம்பர் 20 அன்று சென்னை, பெங்களுரு, ஹைந்திராபாத்,லூத்தியனா,பூனே, பாட்டியலா மற்றும் சண்டிகரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
3. மஹிந்திரா குவேன்டா(Quanto) முன்பதிவு கடந்த இரு மாதங்களில் 10000 எட்டியள்ளது. முன்பதிவினை கருத்தில் கொண்டு தன்னுடைய நாஸிக் உற்பத்தி ஆலையில் 2500யில் இருந்து 3500யாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
4. உலகின் மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான லேம்பார்கனி மொபைல் மற்றும் டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது.
5. BMW நிறுவனம் இந்தியாவில் வருகிற நவம்பர் 22 அன்று 2013 BMW X6 facelift காரை அறிமுகம் செய்ய உள்ளது.
டீசல் 3.0 லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் குதிரை திறன் 235bhp ஆகும்.
பெட்ரோல் 4.4 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் குதிரை திறன் 408bhp ஆகும். இரண்டிற்க்கும் 8 ஸ்பீட் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.