டிவிஎஸ் நிறுவனத்தின் மாடல்களின் டிவிஎஸ் அப்பாச்சி பைக் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிஎஸ் அப்பாச்சி 150சிசி பைக்காக விற்பனைக்கு வந்தது.
தற்பொழுது மூன்று விதமான மாறுபட்டவையில் அப்பாச்சி பைக் கிடைக்கின்றது. அவை அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ் ஆகும்.
20க்கு மேற்பட்ட நாடுகளில் டிவிஎஸ் அப்பாச்சி விற்பனை செய்யப்படுகின்றது. இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற அப்பாச்சி தற்பொழுது 10 இலட்சம்(1 மில்லியன்) பைக்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை கொண்டாடும் விதமாக சிறப்பு பதிப்பில் அப்பாச்சி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பதிப்பில் வண்ணத்தில் மட்டும் மாற்றம் இருக்கும்.