டாடா மோட்டார்சின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக டாடா நானோ வரவுள்ளது. டாடா நானோ மின்சார காரில் முகப்பு மற்றும் பின்புற தோற்றங்களில் சிறிய அளவிலான மாற்றத்தினை பெற்றிருக்கலாம்.
இந்திய சந்தையில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ரெவா கலக்ட்ரிக் காரை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்த மஹிந்திரா ரேவா இ2ஓ மின்சார காரினை தொடர்ந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா எலக்ட்ரிக் செடான் காரினை தொடர்ந்து டாடாவின் முதல் எலக்ட்ரிக் காராக இந்திய சந்தைக்கு வரவுள்ள நானோ மின்சார் கார் தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் வெளியாகியுள்ளது.
e2o எலக்ட்ரிக் காருக்கு நேரடியான போட்டி மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள நானோ எலக்ட்ரிக் காரில் 160 கிமீ வரை பயணிக்க கூடிய வகையிலான லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றிருக்கலாம்.
வெளியாகியுள்ள சோதனை ஓட்ட பங்களில் இடதுபுறத்தில் பின்புறம் அமைந்துள்ள பம்பருக்கு மேலாக எலக்ட்ரிக் சாக்கெட் உள்ளதை தெளிவாக படமெடுத்துள்ளனர். இந்த வருடத்தின் இறுதிக்குள் டாடா நானோ மின்சார கார் விற்பனைக்கு வரலாம்.
படங்கள் ; teambhp