டட்சன் கோ ப்ளஸ்
டட்சன் கோ காரினை அடிப்படையாக கொண்ட கோ+ எம்பிவி காரினை உருவாக்கியுள்ளனர். 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள கோ ப்ளஸ் கார் 7 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய விலை மலிவான காராக விளங்கும்.
சிறியரக கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சூசுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக டட்சன் பிராண்டில் நிசான் விலை குறைவான காரினை அறிமுகம் செய்தது.
ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பினை பெறவில்லை என்பதே உண்மை..
தோற்றம்;
கோ காரினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கோ ப்ளஸ் எம்பிவி கோ காரின் முகப்பு தோற்றத்தினை பெற்றிருக்கின்றது. முகப்பில் உள்ள தேன்கூடு கிரில் மிகவும் நேர்த்தியாக உள்ளது. பக்கவாட்டில் உள்ள வளைவுகள் மற்றும் பின்புறத்தில் பாக்ஸ் டைப் போல உள்ளது. காரின் கூரை பின்புறத்தில் சரிவாக செல்கின்றது. டாப் மாடலில் கூட பனிவிளக்குகள் கிடையாது.
உட்கட்டமைப்பு;
கோ காரில் இருந்த அதே டேஸ்போர்டு மேலும் கோ காரில் உள்ளது போலவே கியர் ஸ்ஃப்ட் லிவர் டேஸ்போர்டில் உள்ளது. மிகவும் எளிமையான வடிவமைப்பினை பெற்றுள்ளது.
மாஸ்டர் பவர் வின்டோ சுவிட்ச் கிடையாது. ஓடோர்களுக்கு தனித்தனியான சுவிட்ச் கொடுத்துள்ளனர். 7 இருக்கைகள் கொண்டிருக்கும் ப்ளஸ் மிகவும் குறுகிய இடவசதியே கொண்டுள்ளது. அதன் காரணம் இதன் வீல்பேஸ் 2450மிமீ மட்டுமே.
முதல் வரிசை இருக்கைகளில் இடவசதி உள்ளதாம். இரண்டாம் வரிசையில் சற்று குறைவான இடவசதி உள்ளது. மூன்றாவது வரிசையில் சிறுவர்கள் மட்டுமே அமரமுடியுமாம். பூட் வசதி பின் இருக்கைய மடக்கினால் அதிகப்படியான இடம் கிடைக்கும்.
என்ஜின்;
கோ காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 68 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர். மிக சிறப்பான செயலாற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாகும்.
ஆராய் சோதனையின் படி கோ ப்ளஸ் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.6 கிமீ ஆகும்.
பாதுகாப்பு அம்சங்கள்;
குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ், காற்றுப்பைகள் டாப் மாடலில் கூட கிடையாது.
விலை
ரூ. 4லட்சத்தில் இருந்து 5லட்சங்களுக்குள் கோ ப்ளஸ் கார் விலை இருக்கலாம். அதற்க்கு மேல் விலை இருந்தால் சந்தையில் தாக்குப்பிடிப்பது மிகவும் கடினமே…
கோ ப்ளஸ் வாங்கலாமா ?
சாதகமானவை
குறைவான விலையில் 7 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய கார்
சிறப்பான செயல்திறன் கொண்ட கார்
பாதகமானவை;
பாதுகாப்பு அம்சங்கள் கிடையாது.
குறைவான தரத்தினை பெற்றுள்ளது.
ஆட்டோமொபைல் தமிழன் பார்வை
குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட இல்லை என்பதே சற்று உறுத்தலாகத்தான் இருக்கின்றது. எரிபொருள் சிக்கனம், குறைந்த விலையில் கொஞ்சம் பெரிய கார் அதாவது 7 நபர்கள் அமர்ந்து செல்லகூடிய கார் என சொல்லாம்.