உலக சந்தையில் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ள ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி கார் டொயோட்டா ஃபார்ச்சூனர் பிரிமியம் எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியாக களமிறங்குகின்றது.
தோற்றம்
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி கேப்டிவா போன்று மென்மையான தோற்றத்தில் இல்லாமல் மிரட்டலான தோற்றத்தில் ஃபார்ச்சூனருக்கு இணையாக உள்ளது.
பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறத்தில் மிக பெரிய பிரிமியம் எஸ்யூவி என்பதனை உறுதி செய்கின்றது. 18 இஞ்ச் ஆலாய் வீல் பொருத்த உள்ளனர்.
உட்ப்புறம்
7 இருக்கைகள் கொண்ட ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. ஃபார்ச்சூனரை விட 95மிமீ வரை கூடுதலான வீல்பேஸ் (ஃபார்ச்சூனர் வீல் பேஸ் 2750மிமீ ட்ரெயில்பிளேசர் வீல் பேஸ் 2845மிமீ ஆகும்) கொண்டுள்ளதால் மூன்றாம் வரிசை இருக்கையில் இடவசதி தாரளமாக இருக்கும்.
என்ஜின்
200எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.8 லிட்டர் டியூரோமேக்ஸ் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் முறுக்கு விசை 500என்எம் ஆகும். மெனுவல் மற்றும் தானியங்கி என இரண்டு டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.
4×2 மற்றும் 4×4 போன்ற டிரைவ் ஆப்ஷனிலும் ட்ரெயில்பிளேசர் கிடைக்கும். ஃபார்ச்சூனரில் 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் என இரண்டு என்ஜின் ஆப்ஷன் கிடைக்கின்றது. ஆனால் 3.0 லிட்டர் என்ஜின் ஆற்றலே 169எச்பி மட்டும்தான்.
இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், ஹீல் டீசன்ட் கன்ட்ரோல் , கார்னரிங் கன்ட்ரோல் , டிராக்ஷன் கட்டுப்பாடு போன்ற அம்சங்களை பிரிமியம் எஸ்யூவி கார்களில் நிரந்தர அம்சமாக இருக்கும்.
விலை என்ன ?
ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் விலை ரூ21 இலட்சம் முதல் ரூ.26 இலட்சத்திற்க்குள் இருக்கும். ஃபார்ச்சூனர் டாப் மாடலை விட ட்ரெயில்பிளேசர் டாப் மாடல் விலை ரூ.50000 முதல் 70000 வரை குறைவாக இருக்கலாம்.
ட்ரெயில்பிளேசர் வெல்லுமா ?
ஃபார்ச்சூனருக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என்பதனால் சந்தையில் நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டியாளர்கள்
டொயோட்டா ஃபார்ச்சூனர் , ஃபோர்டு எண்டெவர், ஹூண்டாய் சான்டா ஃபீ , சாங்யாங் ரெக்ஸ்டான் , மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட், ஹோண்டா சிஆர்-வி கார்களுக்கும் போட்டியை ஏற்ப்படுத்தும்.
மேலும் வாசிக்க
டாப் 5 பிரிமியம் எஸ்யூவி கார்கள்
டொயோட்டா வயோஸ் செடான் வெல்லுமா?