செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்டுள்ள செவர்லே விரைவில் வருவதனை உறுதுசெய்துள்ளது. வரும் ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி அக்டோபர் 21ந் தேதி விற்பனைக்கு வரலாம்.
செவர்லே ட்ரெயில்பிளேசர் |
செவர்லே தனது இணையத்தில் ட்ரெயில்பிளேசர் விபரங்களை வெளியிட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் மட்டும் வரவுள்ள நிலையில் மெனுவல் டிரான்ஸ்மிஷன் தாமதமாக வரவுள்ளது.
197பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 500என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
7 இஞ்ச் மைலிங்க தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் தொடர்பு , ஆடியோ வீடியோ மற்றும் நேவிகேஷன் அமைப்பினை பெற இயலும். இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் ஹீல் அசிஸ்ட் கன்ட்ரோல் ஹீல் டீஸசன்ட் கன்ட்ரோல் ஆப்ஷன்கள் உள்ளது.
செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ஆன்ரோடு விலை ரூ.31லட்சத்தில் இருக்கலாம்.
Chevrolet Trailblazer SUV teased