இந்தியாவின் ஜென்ரல் மோட்டார்ஸ் பிரிவின் கீழ் செயல்படும் செவர்லே இந்தியா நிறுவனத்தின் டவேரா , செயில் மற்றும் என்ஜாய் கார்களை இந்திய சந்தையிலிருந்து ஏப்ரல் 1 முதல் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
செவர்லே இந்தியா
- டவேரா , என்ஜாய் மற்றும் செயில் மாடல்கள் சந்தையிலிருந்து நீக்கம்
- புதிய பீட் , பீட் எசென்சியா போன்ற மாடல்கள் அடுத்த சில வாரங்களில் வரவுள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிதும் சோபிக்காத டவேரா ,என்ஜாய் மற்றும் செயில் போன்ற மாடல்களை சந்தையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இந்திய சந்தையில் நன்மதிப்பினை இழந்து வரும் செவர்லே கடந்த சில வருடங்களாகவே பெரிதாக சந்தையில் சோபிக்க தவறியதை ஈடுகட்டவே செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மாடலை களமிறக்கியது.
புதிய தலைமுறை செவர்லே பீட் மற்றும் பீட் காரின் அடிப்படையில் உருவாகி வரும் பீட் எசென்சியா செடான் ரக கார் மாடலை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த ஆண்டின் மத்தியில் பீட் மற்றும் எசென்சியா மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளது.