சென்னை மழை வெள்ளத்தால் அதிகபட்ச எண்ணிக்கையில் கார்கள் மற்றும் பைக்குகள் பாதிக்கப்பட்டதை அறிவோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை வாங்கலாமா ? வேண்டாமா ?
தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் எண்ணற்ற பைக்குகள் மற்றும் கார்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இவற்றில் பல கார்கள் சர்வீஸ் சென்டரல்லும் சில கார்கள் யூஸ்டூ கார் சந்தைக்கும் வர தொடங்கியுள்ளது. இந்த கார்களை வாங்கலாமா ?
என்ஜினுக்குள் நீர் செல்லாத வகையில் புதிய தலைமுறை கார்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் என்ஜின் மட்டுமல்லாமல் வாகனத்தின் மற்ற பகுதிகளில் பாதிப்புகள் அடைந்திருக்கும். மேலும் ஏதேனும் ஒரு வகையில் என்ஜினுக்குள் நீர் நுழைந்திருக்க வாய்ப்புகளும் உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை வாங்குவதனை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் . பெரும்பாலான கார் விலை குறைவாக இருக்கும் என்பதனால் வாங்கிவிட்டு சிரமத்துக்கு உள்ளாக வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் ஏன் வாங்க கூடாது ?
என்ஜினுக்குள் நீர் புகுந்திருக்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளது.
பெரும்பாலான புதிய கார்களில் சென்சார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் யூனிட்களை அதிகம் பெற்றுள்ளதால் அவைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
கார்களின் எலக்ட்ரிக் வயரிங் என்பது மாபெரும் கடல் போலதான் நீரில் மூழ்கிய கார்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
உட்புறத்தில் நீர் புகுந்திருக்க பெரிதும் வாய்ப்புகள் உள்ளதால் இருக்கைகள் , டேஸ்போர்டு , அப்ஹோஸ்ட்ரி போன்றவை நாளாக நாளாக நீரின் தன்மையை தெரிய வரும்.
உட்புறத்தில் வெள்ளம் புகுந்திருந்தால் ஏசி , டேஸ்போர்டு மற்றும் உட்புறத்தில் நாளடைவில் தேவையற்ற வாடை வரும். இவை எந்த நறுமன பொருட்களாலும் விரட்ட இயலாது . புதிதாக அவற்றை மாற்ற வேண்டிய நிலையில் முடியும்.
வாகனத்தின் பிளாட்ஃபாரம் பெரிதும் நீரில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதனால் நாளடைவில் துருப்பிடித்து பிளாட்ஃபாரம் மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
டோர் கதவுகளின் உட்புறத்தில் நிச்சியமாக நீர் நுழைந்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதனால் இவைகளை சுத்தம் செய்திருந்தாலும் துருப்பிடித்து கதவுகள் மற்றும் பாடி பேனல்கள் போன்றவற்றை மாற்ற நேரிடும் இவை உடனடியாக தெரியாது ஒரு சில வருடங்கள் கூட ஆகலாம்.
எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் பெரிதும் பாதிப்படைந்திருக்கும்.
காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் பாதிப்படைந்திருக்கும்.
பாதிக்கப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதனை பக்கம் 2 அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.
[nextpage title=”NEXT PAGE”]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை கண்டுபிடிப்பபது எவ்வாறு ?
கண்னை நம்பாதீர்கள் ; ஆம் மழையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வாகனங்களும் பாடி பாலிஷ் போன்றவற்றை செய்து மிகுந்த அழகாக காட்சி தரும்.
உட்புறத்தில் வேக்கம் கிளினர் போன்றவற்றை பயன்படுத்தி ஈரத்தினை உறிந்திருப்பார்கள் . ஆனாலும் ஈரப்பதம் இருக்க வாய்ப்பு உள்ளது.
வாகனத்தின் பதிவென் மற்றும் முகவரியை கொண்டு பெருமழை பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த வாகனமா என்பதனை கண்டறியலாம்.
சிலர் இந்த வாகனங்களை வேறு மாவட்டங்களிலோ அல்லது மாநிலத்திலோ மறுபதிவு செய்து விற்பனை செய்யலாம் . பதிவென் புத்தகத்தை கவனியுங்கள்.
உட்புறத்தில் வித்தியசமான நறுமனம் இருக்கை பட்டைகளில் வித்தியாசம் டேஸ்போர்ட் நிறம் மாறியிருப்பது.
இருக்கைள் தன்மை குலைந்திருக்கும்.
பிளாட்ஃபாரத்தை கவனியுங்க; வாகனங்களில் உட்புறத்தின் வழியாக அடிதளத்தின் ஃபுளோர் மேட்டினை நீக்கிவிட்டு அடித்தளத்தினை சோதியுங்கள்.
டூல்பாக்ஸ் அறையில் கவனமாக பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்துவிடும் மழையால் பாதிக்கப்பட்ட வாகனமா என்று ?
வாகனத்தின் அடிப்பகுதியில் மிக எளிமையாக கண்டுபிடித்து விடலாம். துருபிடிக்க தொடங்கியிருக்கும்.. மேலும் பெயின்ட் செய்யப்படாத பகுதிகளில் ஒருவிதமான உப்புகறை அல்லது தொட்டு பார்த்தாலே சொரசொரப்பான தன்மை . வாகனத்தின் அடியில் படுத்து பாக்க வேண்டாம் . ஏதேனும் லிஃப்ட் அல்லது வாட்டர் சர்வீஸ் சென்டர்களில் வாகனத்தினை நிறுத்தி அடியில் பாருங்கள்.
முடிந்தவரை மழையால் பாதிக்கப்பட்ட வாகனங்களை தவிருங்கள். இவை என்றுமே செலவுகள் தான்.
பிடிச்சிருந்தா உங்கள் நண்பர்கள்கிட்ட பகிர்ந்து கொள்ளங்கள் பிடிக்கலையா கமெட் பன்னுங்க…