சாதரண சாலைகளில் பயன்படுத்தும் கார்களை போல ரேஸ் கார் நுட்பத்தினை அஸ்டன் மார்டின் வேண்டேஜ் எஸ் காரில் அஸ்டன் மார்டின் புகுத்தியுள்ளது. புதிய வி12 வேண்டேஜ் எஸ் 6.2 லிட்டர் எஞ்சினுடன் சீறுகின்றது.
6.2 லிட்டர் எஞ்சின் 12 சிலிண்டர்களை கொண்டு விளங்குகின்றது. இதன் ஆற்றல் 565பிஎச்பி மற்றும் டார்க் 620 என்எம் ஆகும். 7 ஸ்பீடு முடுக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேண்டேஜ் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328கிமீ ஆகும்.
மூன்று விதமான மோட்களை புதிய வேண்டேஜ் எஸ் கொண்டுள்ளது. அவை சாதரண பயணம், ஸ்போர்ட் பயணம் மற்றும் டிராக் பயணம் ஆகும்.
மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் வேண்டேஜ் எஸ் கார் கார்பன் ஃபைபர் பாடியை கொண்டதாக விளங்கும். இனி படங்களை முழுதாக ரசிங்க…