![]() |
சுஸூகி ஜிக்ஸெர் SF |
முழுதும் அலங்கரிக்கப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் 150சிசி பைக் மிக சிறப்பான தரம் மற்றும் விலையை கொண்ட மாடலாக விளங்குகின்றது. இந்த பைக்கானது ஜிக்ஸெர் பைக் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.
சிறப்பு பதிப்பு ஹெல்மெட்கள் சுஸூகி டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹெல்மெட் ஜிக்ஸெர் எஸ்ஃஎப் வாடிக்கையாளர்கள் மற்றும் விரும்பிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹெல்மெட் ஆனது ஜிக்ஸெர் எஸ்எஃப் மோட்டோ ஜிபி எடிசன் பைக் மாடலின் வண்ணத்திலே அமைந்துள்ளது. ஸ்கிராட்சினை தடுக்கம் வைசர் மற்றும் பாதுகாப்பு தர அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.
![]() |
சுஸூகி ஜிக்ஸெர் SF ஹெல்மெட் |
மீடியம் , லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா-லார்ஜ் என மூன்று விதமான அளவுகளில் கிடைக்கும். ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு பதிப்பு ஹெல்மெட்களுக்கு தற்பொழுது சுஸூகி டீலர்களிடம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் செப்டம்பர் மத்தியில் கிடைக்கும்.
மேலும் படிக்க ; தரமான தலைகவசம் அணிவது எவ்வாறு ?
ஜிக்ஸெர் எஸ்ஃஎப் சிறப்பு பதிப்பு ஹெல்மெட் விலை ரூ.2.199 ஆகும்.
Suzuki Gixxer SF Special Edition Helmet Launched