சுஸூகி மோட்டார்சைக்கிள் பிரிவின் சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் ரியர் ஆக்சில் சாப்டில் உள்ள பிரச்சனையின் காரணமாக 54,740 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளது. ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் தயாரிப்பு தேதி மார்ச் 8 , 2016 முதல் ஜூன் 22,2016 வரை தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
பின்புற சக்கர அச்சில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்கூட்டர்களிலும் திரும்ப பெற்று இலவசமாக மாற்றதருவதற்கு அதிகார்வப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ரியர் ஆக்சில் சாஃப்ட் மாற்றுவதுடன் கூடுதலாக இலவச கால இடைவெளியிலான பராமரபினை வழங்குகின்றது.
இன்று முதல் அதாவது ஜூலை 13 ,2016 முதல் அக்டோபர் 31 வரை உள்ள காலகட்டத்தில் இந்த இலவச பராமரிப்பு மற்றும் ரியர் அச்சி மாற்றுதலை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த அதிகார்வப்பூரவ விபரங்கள் மற்றும் அழைப்பு போன்றவற்றை உலங்களின் டீலர்கள் வாயிலாக கிடைக்கும்.
சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் 8.7 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 124சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.2 Nm ஆகும். மேலும் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki ECO Performance) நுட்பத்தினை பெற்றுள்ளதால் ஒரு லிட்டருக்கு 64 கிலோமீட்டர் ஆகும்.
உங்கள் ஸ்கூட்டர் பாதிப்பில் உள்ளதா என்பதனை அறிய உங்கள் டீலரை இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.