சுசுகி எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவர் காரினை ஜெனிவா மோட்டார் ஷோவில் சுசுகி மோட்டார் பார்வைக்கு வைத்துள்ளது. சுசுகி எஸ் கிராஸ் காரை ஃபியட் மற்றும் சுசுகி இனைந்து மேம்படுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி எஸ்எக்ஸ்4 காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்துப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் (ஃபியட் எஞ்சின்) பயன்படுத்தப்பட்டுள்ளது.