ஆல்ட்டோ 800 மற்றும் இயான் போனற தொடக்க நிலை கார்களுக்கு மிக சவாலினை ஏற்படுத்த வல்ல ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. க்விட் காரின் போட்டியாளர்களுடன் ஒரு ஒப்பீட்டு பார்வை கானலாம்.
உலகின் விலை குறைவான காரின் டார் மாடலை விட குறைவான தொடக்க விலையில் க்விட் கார் சந்தைக்கு வந்துள்ளாதால் எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
தோற்றம்
ரெனோ க்விட் தோற்றத்தில் மற்ற போட்டியாளர்களை விட சிறப்பாக அமைந்துள்ளதால் அதுவே மிக பெரிய அங்கீகாரமாக அமையும். அதனை தொடர்ந்து ஹூண்டாய் இயான் மற்றும் ஆல்ட்டோ 800 உள்ளது.
கவர்ச்சியான மினி எஸ்யூவி போல காட்சிளிக்கும் க்விட் காரின் கிரவுன்ட் கிளியரன்ஸ் எஸ்யூவி கார்களுக்கு ஈடாக உள்ளது.
இன்டிரியர்
இயான் கார் இன்டிரியர் ஆப்ஷன் மற்றும் வசதிகளில் சிறப்பாக அமைந்துள்ளது. க்விட் காரில் 7 இஞ்ச் மீடியா நேவ் இன்ஃபோடெயின்மென்டில் பூளூடூத் , யூஎஸ்பி , நேவிகேஷன் போன்றவற்றை பெற்றுள்ளது. ஆல்ட்டோ காரில் தரமான இன்டிரியரை பெற்றுள்ளது. பூட் ஸ்பேஸ் விசயத்தில் க்விட் சிறப்பாக உள்ளது.
என்ஜின்
க்விட் மற்றும் இயான் ஆற்றலில் சமமாக உள்ளது. ஆனால் ஆல்ட்டோ 800 கார் சற்று குறைவாக உள்ளது. க்விட் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரவல்ல காராக முதன்மையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஆல்ட்டோ800 மற்றும் இயான் உள்ளது.
விலை
க்விட் கார் மற்ற போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தியுள்ளது. இயான் கார் விலை மற்ற இரண்டை விட கூடுதலாக உள்ளது,
ஆல்ட்டோ 800 சந்தையில் முன்னனியாக உள்ளது. வலுவான பிராண்ட் மதிப்பினை பெற்றுள்ள ஆல்ட்டோ800 காரை வீழ்த்துவது கடினமாக இருந்தாலும் க்விட் கார் ஆல்ட்டோக்கு கடும் சவாலாக அமையும்.
Renault Kwid Vs Maruti Alto 800 Vs Hyundai Eon – Comparison