ரெனோ க்விட் காரின் 1லி மாடலுடன் போட்டியாளர்களான க்விட் VS டியாகோ Vs ஆல்டோ கே10 Vs இயான் Vs கோ போன்ற கார்களுடன் ஒப்பீடு செய்து 5 கார்களையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் விளங்கும் ஆல்ட்டோ கே10 மற்றும் இயான் 1 லிட்டர் மாடலுக்கு நேரடியான போட்டியாகவும் டியாகோ மற்றும் கோ கார்களுக்கும்சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
டிசைன்
போட்டியாளர்களை விட ரெனோ க்விட் தோற்ற அமைப்பில் சிறப்பான க்ராஸ்ஓவர் ரக தாத்பரியங்களை கொண்ட மாடலாக விளங்குகின்றது. அதனை தொடர்ந்து டியாகோ டிசைன் கவருகின்றது. ஆல்ட்டோ கே10 , இயான் மற்றும் கோ போன்றவை டிசைனில் பழையதாகி விட்ட நிலையில் உள்ளது.
உட்புறம்
இன்டிரியர் அமைப்பில் டியாகோ சிறப்பான வடிவமைப்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து க்விட் , இயான் , ஆல்ட்டோ கே10 மற்றும் கோ போன்றவை உள்ளது.
எஞ்ஜின்
ஆற்றலில் டாடா டியாகோ கார் 84 PS ஆற்றலுடன் முன்னிலை வகிக்கின்றது. அதனை தொடர்ந்து இயான் 69 PS மற்றவை 68 PS ஆற்றலை பெற்று விளங்குகின்றது.
கியர்பாக்ஸ்
அனைத்து மாடல்களும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள நிலையில் ஆல்ட்டோ கே10 மாடலில் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. க்விட் மற்றும் டியாகோ கார்களில் அடுத்த சில மாதங்களில் ஏஎம்டி இடம்பெற உள்ளது.
மைலேஜ்
மாருதி மைலேஜ் கார் என நிருபீக்கும் வகையில் ஆல்ட்டோ கே10 ஒரு லிட்டருக்கு 24.07 கிமீ என ஆராய் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து டாடா டியாகோ ஒரு லிட்டருக்கு 23.84 கிமீ ஆகும்.
விலை
விலை குறைவான காராக டட்சன் கோ முன்னிலை வகிக்கின்றது. அதனை தொடர்ந்து டியாகோ , ஆல்ட்டோ கே10 , க்விட் மற்றும் இயான் உள்ளது.
முழுமையான ஒப்பீட்டை கீழுள்ள அட்டவணையில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
க்விட் 1லி Vs டியாகோ Vs ஆல்டோ கே10 Vs இயான் Vs கோ – ஒப்பீடு
ரெனோ க்விட் | டாடா டியாகோ | மாருதி ஆல்டோ K10 | ஹூண்டாய் இயான் | டட்சன் கோ | |
நீளம் (mm) | 3679 | 3746 | 3620 | 3515 | 3785 |
அகலம் (mm) | 1579 | 1647 | 1475 | 1500 | 1635 |
உயரம் (mm) | 1478 | 1535 | 1460 | 1510 | 1485 |
வீல்பேஸ் (mm) | 2422 | 2400 | 2360 | 2380 | 2450 |
கிரவுன்ட் கிளியரன்ஸ் (mm) | 180 | 170 | 160 | 170 | 170 |
Kerb Weight (கிலோ) | 699 | 1012 | 755 | >790 | 925 |
எஞ்ஜின் | 1.0L | 1.2L | 1L | 1L | 1.2L |
சிலிண்டர் | 3 | 3 | 3 | 3 | 3 |
பவர் (PS) | 68 | 85 | 68 | 69 | 68 |
டார்க் (Nm) | 91 | 114 | 90 | 94 | 104 |
கியர்பாக்ஸ் | 5 MT | 5 MT | 5 MT, AMT | 5 MT | 5 MT |
மைலேஜ் (kmpl) | 23.01 | 23.84 | 24.07 | 20.3 | 20.63 |
எரிபொருள் கலன் (லி) | 28 | 35 | 35 | 32 | 35 |
பூட் ஸ்பேஸ் (லி) | 300 | 242 | 177 | 215 | 265 |
டயர் அளவு | 155/80 – R13 | 175/65 – R14 | 155/65 – R13 | 155/70 – R13 | 155/70 – R13 |
விலை ரூ. லட்சம் | 3.83 – 3.95 | 3.34 – 4.53 | 3.4 – 4.3 | 4.47 – 4.57 | 3.32 – 4.23 |
MT – Manual Transmission
AMT – Automated Manual Transmission
(அனைத்து விலை விபரங்களும் டெல்லி எக்ஸ்ஷோரூம் )