ஒவ்வொரு வாகனத்தின் மைலேஜ் என்பது உரிமையாளருக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எவ்வாறு கார் அல்லது பைக் என எந்த வாகனத்திலும் மிக துல்லியமாக மைலேஜ் கணக்கிடுவது பற்றி எளிமையான 6 படிகளில் அறிந்து கொள்ளலாம்.
மைலேஜ் கணக்கிடும் வழிமுறை
1 . உங்கள் பைக் அல்லது கார் என எந்த வாகனமாக இருந்தாலும் தயாரிப்பாளர் பரிந்துரைத்த ஆயில், டயர் மற்றும் முறையான டயர் பிரஷரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. ஆட்டோ கட் ஆஃப் லெவல் எனப்படுகின்ற வரையில் அல்லது முழுமையாக பெட்ரோல் அல்லது டீசல் டேங்கினை நிரப்புக் கொள்ளுங்கள். வாகனத்தில் எரிபொருள் நிரப்பும் போது வாகனத்தை உலுக்கி பெட்ரோல், டீசல் பிடிப்பது மற்றும் அதிகப்படியான எரிபொருளை நிரப்புவதனை தவிருங்கள்.
3. ட்ரீப்மீட்டர் என்று உங்கள் வாகனத்தின் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் இருப்பதனை பூஜ்யம் செய்து கொள்ளவும். ட்ரீப்மீட்டர் இல்லாத வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மிக சரியான ஓடோமீட்டர் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள்.
4. சராசரி வேகத்தில் சுமார் அதிகபட்சமாக 100 கிமீ வரை பயணத்தை தொடருங்கள். பயணத்தின்போது மித வேகத்தை கடைபிடிப்பதுடன், அதிகப்படியான பிரேக் பயன்பாடு மற்றும் திடீரென வேகம் எடுப்பதனை தவிர்த்திடுங்கள்.
5. ஒன்றுக்கு மேற்பட்ட முறை குறைந்தபட்சம் இரண்டு அல்லது அதிகபட்சமாக மூன்று முறை மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றும்போது ஒரே பெட்ரோல் பங்கினை பயன்படுத்துங்கள்.
6. ஒவ்வொரு முறை முழுடேங்க் காலியாகும் சமயத்தில் ட்ரீப் மீட்டர் ரீடிங்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தற்போது மைலேஜ் கணக்கிடுவதற்கு தயாராகுங்கள்.
மொத்தம் பயணித்த ட்ரீப் மீட்டர் ரீடிங் (கிலோ மீட்டர்)
மைலேஜ் = ———————————————————————————————————— கிமீ / லிட்டர்
எரிபொருள் நிரப்பிய அளவு (லிட்டர்)
எடுத்துக்காட்டு
மைலேஜ் = 400 கிமீ வகுத்தல் 10 லிட்டர் எரிபொருள் என்றால் சராசரியாக உங்கள் வாகனத்தின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் ஆகும்.
வாகனத்தின் மைலேஜ் ஒட்டும் முறையை பொறுத்து நபருக்கு நபர் வாகனத்துக்கு வாகனம் மாறுபடும் என்பதனால் குழப்பத்தை தவிர்த்திடுங்கள்..
ஆராய் எனும் அமைபின் மைலேஜ் எவ்வாறு கணக்கிடப்படுகின்றது. என்பதனை அறிய இங்கே படிக்க — க்ளிக் பன்னுங்க