இந்தியாவில் உள்ள பல முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்திலும் டீசல் வகை கார்கள் உள்ளன. ஆனால் ஹோன்டாவை தவிர இதுவும் இன்னும் சில மாதங்கள்தான். வருகிற ஏப்ரல் மாதத்தில் ஹோன்டாவின் முதல் டீசல் கார் ஹோன்டா ப்ரியோ அமேஸ் வரவுள்ளது.
எந்த பைக் வாங்கலாம் 1
எந்த பைக் வாங்கலாம் 2
எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்
்பு நிச்சியமாக உறுதி
லிவா டீசல் கார் சிறப்பான தோற்றத்துடன் நல்ல வடிவமைப்பான வாகனமாக விளங்குகிறது. டீசல் மாறுபட்ட வகையில் 2 கார்கள் உள்ளன. பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த GD செஃப்டி வேரியன்ட் மற்றும் குறைவான பாதுகாப்பு கொண்ட GD. 1364 சிசி SOHC என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 68 BHP மற்றும் டார்க் 170NM ஆகும்.
டோயோட்டோ எடியாஸ் லிவா டீசல் கார் மைலேஜ் 23.59 Kmpl (ARAI certified)
பல எடியாஸ் லிவா கார் பயனர்கள் கார் மிக சிறப்பாக உள்ளமாக கூறுகின்றனர். ஏபிஎஸ், எஸ்ஆர்எஸ் காற்றுப்பைகள், எலக்ட்ரானிக் பிரேக் அசிஸ்ட் என பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
இன்டிகா கார்களை பொருத்தவரை டாக்ஸி கார் என்ற முத்திரை பதிந்து விட்டது. பெரும்பாலும் குடும்பத்திற்க்காகவோ, தனி நபர்க்கான பயன்பாட்டிற்க்கு இந்த காரை பெரும்பாலும் பலரும் விரும்புவதில்லை. ஆனால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் டீசல் கார்களில் இதுவும் ஒன்று.
1396 சிசி டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 75 BHP ஆகும்.
இன்டிகா Ev2 மைலேஜ் 25 Kmpl (ARAI certified)
4. மாருதி ஸ்விஃப்ட்
2005 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் பெரும்பாலான நபர்கள் விருப்பமான காராகத்தான் உள்ளது. 3 மாறுபட்ட டீசல் வகைகள் உள்ளன. ஸ்விஃப்ட் காரில் 1248 சிசி டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 75BHP மற்றும் டார்க் 190NM ஆகும்.
ஸ்விஃப்ட் டீசல் மைலேஜ் 22.9 Kmpl (ARAI certified)
ஸ்விஃப்ட் டீசல் கார் பயன்படுத்தபவர்களின் அனுபவத்தில் சராசரியாக கிடைக்கும் மைலேஜ் 20கீமி வரை கிடைக்கின்றதாம். மிக சிறப்பான தோற்றம் என பல ஆண்டு சந்தையில் உள்ளது .30 மில்லியன் கார்களை உலகயளவில் விற்றுள்ளனர்.
ஸ்விஃப்ட் டீசல் Ldi ரூ 5.74 இலட்சம்
ஸ்விஃப்ட் டீசல் Vdi ரூ 6.27 இலட்சம்
ஸ்விஃப்ட் டீசல் Zdi ரூ 7.10 இலட்சம்
5. ஃபோக்ஸ்வேகன் போலோ
ஃபோக்ஸ்வேகன் போலோ கார் பல ஹேட்ச்பேக் கார்களுக்கான சவலான காராகும்.டீசல் மாறுபட்ட வகையில் 3 கார்கள் உள்ளன. . 1199 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 75 BHP டார்க் 180NM ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் போலோ டீசல் மைலேஜ் 22.07 Kmpl (ARAI certified)
மிக சிறப்பான கார் கையாளுவதற்க்கு இலகுவாக இருக்கும்
போலோ டீசல் Comfortline 1.2L ரூ 6.59 இலட்சம்
போலோ டீசல் Trendline 1.2L ரூ 6.09 இலட்சம்
மேலும் சில கார்களின் மைலேஜ்
மாருதி ரிட்ஸ் – மைலேஜ் 23.2 kmpl, 1248 CC என்ஜின், 75 BHP power.
நிசான் மைக்ரா – மைலேஜ் 23.08 km/lit, 1461 CC என்ஜின், 64 BHP power
ஸ்கோடா ஃபேபியா – மைலேஜ் 21 km/lit, 1199 CC என்ஜின் 75 BHP power.
ஃபோர்டு ஃபியாகோ – மைலேஜ் 20 km/lit, 1.4 litre என்ஜின் , 68 BHP Power.
டாடா விஸ்டா Quadra – மைலேஜ் 22.3 km/lit, 1248 cc என்ஜின் 75 BHP power.
டாடா விஸ்டா டி90 டீசல் இதன் மைலேஜ் 21.21kmpl பற்றி படிக்க டாடா விஸ்டா D90 கார்
1. செவ்ரலே பீட் டீசல்
2. ஃபோக்ஸ்வேகன் போலோ டீசல்
3. டோயோட்டோ எடியாஸ் லிவா.
செடான் பிரிவு கார்களை பற்றி விவரங்கள் தேவைப்படுவோர் கருத்துரையில் குறிப்பிடுங்கள்…
* விலை விபரங்கள் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் பெங்களுர் விலை.