ஹீரோ மோட்டோகார்ப் மத்திய அமெரிக்க நாடுகளில் விற்பனையை தொடங்கியுள்ளது. இண்டி மோட்டாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை தொடங்கியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவான்ட்மாலா, இஐ சால்வேடார் மற்றும் ஹாண்டூராஸ் போன்ற நாடுகளில் முதற்கட்டமாக விற்பனையை தொடங்கியுள்ளது.
ஹீரோ பைக் மாடல்களான ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பிளென்டர், எச்எஃப் டான், கிளாமர், அச்சிவர், ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்களை விற்பனை செய்ய உள்ளது.
மேலும் வரும்காலங்ளில் லத்தின் அமெரிக்கா, மற்ற மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய தனது டீலர்களை அங்குள்ள தனது கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து தொடங்க உள்ளனர்.
தற்பொழுது விற்பனையில் உள்ள வெளிநாடுகள் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் கொலம்பியா ஆகும்.